நாளை திமுக கூட்டணிக் கட்சிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து அடுத்த கட்டப் போராட்டம் நடத்துவது குறித்துதிங்கள்கிழமை சென்னையில் கூடி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ள நிவாரணம் வழங்கும் போது அதிமுகஅரசின் பொறுப்பற்ற போக்கால் 51 உயிர்கள் பலியானதைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், டிசம்பர்30ம் தேதி காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது,
தோழமைக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுத்ததையொட்டி, திங்கள்கிழமை காலை 10 மணியளவில் சென்னைஅண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இக்கூட்டத்தில் தோழமைக் கட்சித் தலைவர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications