தமிழக தேர்தல்: நாளை ஆலோசனை கூட்டம்
சென்னை:
தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் கமிஷனர்கள் கொண்ட உயர்மட்டக் கூட்டம் நாளை கூடுகிறது. இந்த ஆண்டு தமிழக சட்டசபையின் கவர்னர் உரைக்கான கூட்டத் தொடர் இம்மாத இறுதியில்அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே இரண்டாவது வாரத்துடன் தற்போதுள்ள ஆட்சியின் பதவிக் காலம் முடிவடைகிறது.அதற்குள் சட்டசபைக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். இதேபோல, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கானசட்டசபை தேர்தலும் நடத்தியாக வேண்டியுள்ளது.இந்த 5 மாநிலங்களின் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் தேதி குறித்து விவாதிப்பதற்காக தலைமை தேர்தல் கமிஷனர்டாண்டன் தலைமையில் தேர்தல் கமிஷனர்களின் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் நடக்க உள்ளது.
இதில் எந்த மாதத்தில் சட்டசபை தேர்தலை நடத்தலாம் என்பது பற்றி முடிவு செய்யப்படும். இதைத் தொடர்ந்து, ஒவ்வொருமாநிலத்திலும் எத்தனை கட்டங்களாக எந்தெந்த தேதிகளில் தேர்தலை நடத்துவது என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை வரும் பிப்ரவரி 27ம் தேதியன்று தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன்பின் தேர்தலுக்கான பணிகளை துவக்க வேண்டும். எனவே, முன்னதாகவே தேர்தல் தேதியை தீர்மானித்தால் தான் அடுத்தகட்டபணிகள் குறித்து திட்டமிட முடியும்.
இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் வரும் 10ம் தேதியன்று நெல்லை வர உள்ளார். அப்போது வாக்காளர் பட்டியல்திருத்தப் பணி குறித்தும், சட்டசபை தேர்தலை எந்த மாதத்தில் நடத்தலாம் என்பது பற்றியும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்த உள்ளார்.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளிகளுக்கான இறுதித் தேர்வுகள் நடக்க உள்ளதால் அந்த சமயத்தில் தேர்தலை நடத்த எதிர்ப்புஉள்ளது. இதனால் ஏப்ரல் கடைசி வாரத்திலோ, மே முதல் வாரத்திலோ தேர்தலை நடத்துவது பற்றி தேர்தல் கமிஷன் பரிசீலிக்கஉள்ளது. அவ்வாறு மே முதல் வாரத்தில் தேர்தலை நடத்தினாலும், பிரசாரங்களால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
இதுதவிர மே மாதம் கோடை காலம் என்பதால் வெயிலின் கொடுமை குறித்தும் தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்யும்.இதற்கிடையே, தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத் தொடரை நடத்த வேண்டிய நிலையில் அரசு உள்ளது. வழக்கமாக ஜனவரிமாதத்தில் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் துவக்கி வைக்கப்படும்.
இந்த ஆண்டு கவர்னர் உரைக்கான கூட்டத் தொடர் இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க உள்ளது.இதற்கான தேதிகளை கவர்னர் பர்னாலா விரைவில் உறுதி செய்து அறிவிப்பு வெளியிடுவார்.












Click it and Unblock the Notifications