தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் பங்கு: ப.சி
சென்னை:
அவரவர் உட்கார்ந்துள்ள நாற்காலியை விட்டு இறங்கி கால்பாதம் மண் தரையில் பதித்து நடந்து பார்த்தால் தான் மக்களுக்குஎன்ன தேவை என்பது தெரியும். 12 மத்திய அமைச்சர்களும் தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்கள் என்பதும் தெரியும் எனமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மத்திய அரசின் பல்துறை விளக்கக் கண்காட்சி சென்னை புதுவண்ணை தங்கம் மஹாலில் நடந்தது. இதன் நிறைவு விழாவில்கலந்து கொண்டு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள 12 மத்திய அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என சிலர் கேட்கின்றனர். தமிழகத்திற்கு என்ன செய்யவில்லைஎன்று நான் கேட்கிறேன். அவரவர் உட்கார்ந்துள்ள நாற்காலியை விட்டு இறங்கி கால்பாதம் மண் தரையில் பதிந்து நடந்துபார்த்தால் தான் மக்களுக்கு என்ன தேவை என்பது தெரியும். நமது மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்கள்என்பதும் தெரியும்.
மாணவ, மாணவியர் படிக்க கடனுதவியாக கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து ஆயிரம் பேருக்கும், இந்த ஆண்டு ஒன்பது மாதத்தில்ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடனுதவியை தொடர்பான செய்திகள் எந்த ஆட்சியும்வழங்கியதில்லை. இதன் மூலம் கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.
தொழில் தொடங்க ஐந்து லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு கடனுதவி வழங்கியுள்ளது. இந்த உதவி நமக்குகிடைக்கவில்லையே என்று நினைப்பு இருக்கலாம். புத்தாண்டு முதல் இந்த குறையை நீக்க ஏற்பாடு செய்துள்ளோம்."ஆம்புட்ஸ்மன் என்ற திட்டத்தின் படி நாளை முதல் ரிசர்வ் வங்கியில் தனி அதிகாரி நியமிக்கப்படுகிறார். தனி அதிகாரிக்குநீதிமன்றங்களுக்கு உள்ளது போன்ற அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கெங்கு நாற்கரங்கள் திட்டம், எங்கெங்கு தேசிய நெடுஞ்சாலைகள் என அறிய பட்டியல் வரைபடம் அடங்கியபுத்தகம் உள்ளது. ரயில்வே திட்டம் அறிய சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பட்டியல் உள்ளது. சென்னை எண்ணூர்,தூத்துக்குடி துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் புதிய டெர்மினல்கள் அமைக்கப்பட உள்ளன.
சிலர் விரும்பாவிட்டாலும் சேதுசமுத்திர திட்டப் பணிகள் மிக விரைவாக நடந்து வருகிறது. தொலைத் தொடர்புத் துறையில் பலபுரட்சிகள் நடந்துள்ளன என்று கூறினார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications