ராஜீவ் நினைவு சொற்பொழிவு: சோனியாவுக்கு இலங்கை அழைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இலங்கையில் நடைபெற உள்ள முதலாவது ராஜீவ் காந்தி நினைவு சொற்பொழிவில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர்சோனியா காந்திக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே குடியரசுத் தலைவர் மாளிகையில் தன்னைசந்தித்த சோனியா காந்திக்கு இந்த அழைப்பை விடுத்தார். இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருக்கமான நட்புறவு நிலவும்சூழ்நிலையில் சோனியா காந்திக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த மோதலில்உயிரிழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய அமைதிப் படையினருக்காக நினைவு மண்டபம் கட்டும் பணியை இலங்கைவிரைவு படுத்த உள்ளதாக அதிபர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications