பொன்.மாணிக்கவேல் மதுரைக்கு மாற்றம்
சென்னை:
சர்ச்சைக்குரிய எஸ்.பி. பொன்.மாணிக்கவேல், மதுரை அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தபோது, கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த இரண்டுகாவலர்களை, தெருவில் இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து செமத்தியாக மொத்தி எடுத்துப் பரபரப்பூட்டியவர்பொன்.மாணிக்கவேல்.அவரது அதிரடியான நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர், ஆனால் காவல்துறையினர் அவருக்கு எதிரிகளாகமாறினர். இதனால் செங்கை கிழக்கிலிருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டார் பொன். மாணிக்கவேல்.
அங்கும் அவரது அதிரடியான ஆக்ஷன் தொடர்ந்ததால், கள்ளச்சாராய வியாபாரிகள், கந்து வட்டிக்குப் பணம் கொடுப்போர்பீதியடைந்தனர். அவரது அதிரடி வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சக அதிகாரிகள் திணறினர்.
இதில் ஓமலூர் டி.எஸ்.பி மணிரத்தினம் ரொம்பவே நொந்து போய் வீட்டை விட்டு ஓடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தசம்பவத்திற்குப் பிறகு கோவைக்கு மாற்றப்பட்டார் பொன்.மாணிக்கவேல்.
அங்கும் அவருக்கு காவல்துறையினர் ரூபத்தில் பிரச்சினை உருவானது. பொன்.மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கைகளைக்கண்டு அரண்டு போன கோவை காக்கிகள், பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக மேலிடத்தில் புகார் மேல் புகாராக அனுப்பிவந்தனர்.
இதனால் பொன்.மாணிக்கவேலை சற்று ஆறப் போடும் விதமாக, அவரைக் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் தள்ளியதுதமிழக அரசு. தற்போது அவரை மீண்டும் ஆக்ஷனில் இறக்கியுள்ளது அரசு.
மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்.பியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை அவர் பொறுப்பு ஏற்கிறார். மதுரைஅமலாக்கப் பிரிவில் பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பொன்.மாணிக்கவேலின் வருகையால் இந்த வழக்குகள் சூடுபிடிக்கும், மதுரை வட்டாரத்தில் அணல் பறக்கும் எனஎதிர்பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications