மதுரை லாட்ஜ் கொள்ளையர்கள் 3 பேர் கைது
மதுரை:
மதுரை லாட்ஜ்களில் கள்ள சாவியை போட்டு பணத்தை கொள்ளையடித்து சென்று விடும் கொள்ளை கும்பலை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பஞ்சாப்பை சேர்ந்த அன்சூல் அகர்வால் என்பவர் மேற்கு பெருமாள் மேஸ்திரி தெருவில் உள்ள ஒருலாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். அகர்வால் வெளியே சென்றிருந்த போது மர்ம கும்பல் ஒன்று அவரது அறையை கள்ளசாவி போட்டு திறந்து அறையிலிருந்த ரூ.6.25 லட்சத்தை திருடிச் சென்றுவிட்டனர்.இது போல் லாட்ஜ்களில் அடிக்கடி திருடு போவது குறித்து போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. எனவே இந்தகொள்ளையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து குற்றவாளிகளின் கை ரேகைகளை பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தகை ரேகையோடு பழைய குற்றவாளியான நெல்லூரைச் சேர்ந்த தெலுங்கு தேச கட்சியின் மகளிர் அணி செயலாளரின் கணவர்நரசிம்ம ரெட்டி என்பவரின் கைரேகை ஒத்துப்போனது.
உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், தானும் தனது சிறை நண்பர்களுமான கிருஷ்ணரெட்டி, குமார் ஆகிய 3பேரும் லாட்ஜ் கொள்ளையில் ஈடுபட்டதை ஒத்துக் கொண்டார். இதை தொடர்ந்து கிருஷ்ண ரெட்டி, குமார் ஆகிய 2 பேரையும்போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் 3 பேரும் பெரிய ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி சமயம் பார்த்து பக்கத்து அறைகளில் கொள்ளைஅடித்துக் கொண்டு தப்பித்து விடுவதை வழக்கமாக கொண்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதில் கள்ள சாவி போட்டு திருடுவதில் வல்லவரான கிருஷ்ண ரெட்டி, அகர்வால் அறையில் இருந்து ரூ.6.25 லட்சம்கொள்ளையடித்து ரூ.2.75 லட்சத்தை தான் எடுத்துக் கொண்டதாகவும், ரூ.3.25 லட்சத்தை நரசிம்ம ரெட்டிக்கு கொடுத்ததாகவும்,ரூ.25,000 குமாருக்கு கொடுத்ததாகவும் ஒத்துக் கொண்டான் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications