2006 இன்பத் தேனாறு: டி.ஆர். புத்தாண்டு வாழ்த்து
சென்னை:
2006ம் ஆண்டு பிறப்பையொட்டி இயக்குநரும், இலட்சியத் திமுக தலைவருமான விஜய டி.ராஜேந்தர் கவிதை படைத்துள்ளார்.
டி.ஆரின் கவிதை:
கீழ்வானம் சிவக்கட்டும்
கீழ்தட்டு மக்கள் சிறக்கட்டும்
கீழே கிடப்பவர்கள் மேலெழுந்து நடக்கட்டும்!
நாள்காட்டியில் கிழியும் தேதியாய் தீயவை மடியட்டும்
தென்றலாய் பொழுது விடியட்டும்!
மனித நேயம் மலரட்டும்
மக்கள் மனம் குளிரட்டும்!
மத நல்லிணக்கம் பெருகட்டும்!
மண்ணின் வளம் செழிக்கட்டும்!
நடப்பவை நல்லதாய் இருக்கட்டும்!
நலிந்தோர் உள்ளம் சிரிக்கட்டும்
புத்தாண்டு பிறக்கட்டும்!
புத்துணர்வு கொடி கட்டி பறக்கட்டும்!
இரண்டாயிரத்து நாலாம் ஆண்டில் - சுனாமி வந்து சொல்லண்ணா துயர் தந்து சுருண்டு படுத்தது உலக பந்து. இரண்டாயிரத்துஅஞ்சாம் ஆண்டு இடைவிடாது வெள்ளம் கண்டு இதயம் அஞ்சும் ஆண்டாகியது! தவிக்க வைக்கும் வெள்ளம் வந்து தமிழகம்பாடியது, துயரத்தில் சிந்து!
பிறக்கப் போகும் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு நீயாவது இனிப்பேன் என்று கூறு! இந்த ஆண்டு ஓடட்டும் இன்பத் தேனாறு!இனிக்கும் பாலாறு! என்று எழுதட்டும் வரலாறு! என இலட்சியத் திமுக சார்பில் வாழ்த்துகிறேன் விஜய டி.ஆரு! என்றுபாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications