சென்னை-நாகர்: பொங்கல் சிறப்பு ரயில்கள்
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு இரண்டு சிறப்பு ரயில்கள்இயக்கப்படுகின்றன. இதற்கான முன் பதிவு இன்று துவங்குகிறது.இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையாவது:
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சென்னை எழும்பூரிலிருந்து 4ம் தேதி மற்றும் 10ம் தேதி இரவு 7 மணிக்குக்கிளம்பும். அடுத்த நாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும். நாகர்கோவிலிலிருந்து 5ம் தேதி மற்றும் 11ம்தேதிகளில் இரவு 7.30 மணிக்குக் கிளம்பும் ரயில் அடுத்த நாள் காலை 9 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடையும்.
தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, சாத்தூர், திண்டுக்கல், கோவில்பட்டி, மதுரை,திருமங்கலம், விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில் சென்னை எழும்பூரிலிருந்து 6ம் தேதி மற்றும் 8ம் தேதி கிளம்பி அடுத்த நாள் 12 மணிக்கு நாகர்கோவிலைச்சென்றடையும். நாகர்கோவிலிலிருந்து 7ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் கிளம்பும் ரயில் சென்னை எழும்பூரை அடுத்த நாள் காலை9 மணிக்குச் சென்றடையும் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications