பெங்களூர் தாக்குதல்: 3 மாணவர்கள் பிடிபட்டனர்- தீவிரவாதியை பார்த்த பொது மக்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக 3 மாணவர்களிடம் போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்திய அறிவியல் கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் டெல்லியை சேர்ந்த பேராசிரியர் பூரி கொல்லப்பட்டார்.மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் ஹைதராபாத்திலும்ஒருவர் பெங்களூரிலும் பிடிபட்டுள்ளனர்.

பெங்களூர் ஐஐஎஸ்சியில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர வேண்டும் என்று கூறிக் கொண்டு டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரைஇந்த இருவரும் சந்தித்துள்ளனர். அவர் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் பெங்களூர் ஐஐஎஸ்சிக்கு இந்த மாணவர்கள்வந்துள்ளன்.

டெல்லி பேராசிரியரின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஐஐஎஸ்சிக்குள் நுழைந்த இருவரும் அந்த வளாகத்தைநோட்டமிட்டுள்ளனர். சம்பவம் நடந்த தினத்தன்று சர்வதேச மாநாடு நடப்பதையும் அறிந்துள்ளனர். இவர்களுடன் பெங்களூரில்தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவரும் ஐஐஎஸ்சிக்குள் வந்து போய் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இந்த மூவரையும் போலீசார் பிடித்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் தாக்குதல் நடத்திய தீவிரவாதஅமைப்பு லஸ்கர்-ஏ-தொய்பாவை சேர்ந்த அல்-ஹதீஸ் என்ற அமைப்பு என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே அறிவியல் வளாகத்தில் தாக்குதல் நடத்தியது ஒரே ஒரு தீவிரவாதி தான் என்றும் போலீஸ் விசாரணையில்உறுதியாகியுள்ளது.

இந்த தீவிரவாதியின் படத்தை கனிணி மூலம் படம் வரைந்து போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் உள்ளவரைபெங்களூர் கங்கா நகர் பகுதியில் பார்த்ததாக போலீசுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி போலீசார்தீவிரவாதியை பிடிக்க தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து பெங்களூரை அடுத்துள்ள மங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் லஸ்கர்-ஏ-தொய்பா அமைப்பை சேர்ந்ததீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மங்களூர் மற்றும்ஹைதராபாத் நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+