ரூ.20 கோடியில் காவிரி பாசன பகுதி சீரமைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சமீபத்தில் மழை, வெள்ளத்தால் சேதமடைந்த காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 400 பாசனக் கட்டுமானங்களை ரூ. 20கோடியில் புதுப்பித்து, புனரமைக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் 14,725 பாசனக்கட்டுமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும் நல்ல நிலையில் உள்ளன.

இவற்றில், பழுதடைந்திருந்த 775 கட்டுமானங்களை சீரமைத்துப் புதுப்பிக்க கடந்த 2003ம் ஆண்டு உத்தரவிட்டேன். இவை ரூ.34 கோடியில் கடந்த 2004ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு முடிக்கப்பட்டன. இதனால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள், சீரானபாசன வசதியைப் பெற முடிந்தது.

இந் நிலையில் தற்போதைய வெள்ளத்தால் பழுதடைந்துவிட்ட 400 பாசனக் கட்டுமானங்களை சீரமைத்து, புதுப்பிக்கஉத்தரவிட்டுள்ளேன். அடுத்த மாதம் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஜூன் மாதம் முடிவடையும். இதற்காக ரூ. 20 கோடியைஒதுக்கியுள்ளேன்.

இதன் மூலம் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு சீரான பாசன வசதி கிடைக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+