சங்கரராமன்: வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வழக்கு
சென்னை:
பாண்டிச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் சங்கரராமன் கொலை வழக்கை, புதுவையிலேயே வேறுஒரு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அம் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.
புதுவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், சங்கரராமன் கொலை வழக்கு தற்போதுபுதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்த நீதிமன்றம் மிகவும் குறுகலான பகுதியில் அமைந்துள்ளது. நீதிமன்றத்திற்குள்ளும் இட வசதி மிகவும் குறைவு. இதனால்விசாரணையின்போது கோர்ட் அறையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு வழக்கறிஞர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுதவிர, விசாரணை நடைபெறும்போதெல்லாம், பாதுகாப்பு கருதி இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால்தலைமைச் செயலகம், அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
எனவே இந்த நீதிமன்றத்தில் விசாரணையை நடப்பதை விடுத்து, புதுவையிலேயே வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவைஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முருகேசன், இதுதொடர்பாக புதுவை அரசுடன் கலந்தாலோசித்து பதில் மனு தாக்கல்செய்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய புதுவை அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications