சபாஷ் போலீஸ்...: ரூ. 9 நகைகள் கொள்ளை; 10 மணி நேரத்தில் மீட்பு!!!
சென்னை:
சென்னையில் கொள்ளைபோன ரூ. 9 லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகள் 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டுஉரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை, அபிராமபுரம் புல்ஸ் சாலை முதல் குறுக்குத் தெருவில் வசிப்பவர் சுந்தர். இவர் சென்னையில் கட்டிடம் கட்டும்நிறுவனத்தை நடத்தி வருகிறார். டிசம்பர் 30ம் தேதி கேரளாவுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.31ம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் சுந்தரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வைரநகைகளை திருடிச் சென்றார். வீடு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்ட அண்டை வீட்டினர் போலீசாருக்குத் தகவல் தந்தனர்.
இதையடுத்து சம்பவம் இடத்தை தென் சென்னை இணை கமிஷனர் சைலேந்திரபாபு, மயிலாப்பூர் துணை கமிஷனர் கலியமூர்த்திஆகியோர் பார்வையிட்டனர். திருவனந்தபுரத்தில் இருந்த சுந்தரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட போலீசார் உடன்சென்னைக்கு வரும்படி கூறினர்.
விமானத்தில் வந்த சுந்தர், தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து அபிராமபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர்கள்செந்தில்குமரன், சந்திரசேகர், குற்றப்பிரிவு ஏட்டுகள் தனசேகர், விஜயகுமார், திருகுமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டது.
வீட்டில் சிதறிக் கிடந்த பொருட்கள், கதவு, பீரோவில் பதிந்திருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் ரங்கநாதன்,நித்தியானந்தன் ஆகியோர் நள்ளிரவில் சேகரித்து இரவு 3 மணிக்குள் கைரேகை பிரின்ட்டுகளை போலீசாரிடம் கொடுத்தனர்.
அதற்குள் அபிராமபுரம் போலீஸ் நிலைய பகுதியில் உள்ள பழைய குற்றவாளிகள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று மூன்று குற்றவாளிகள் மீது சந்தேகப்பட்டனர். அதில், துரைப்பாக்கம் கண்ணகிதெருவைச் சேர்ந்த சரவணன் (வயது 28) என்பவர் மீது சந்தேகம் வலுத்தது. அதற்கு ஏற்றார் போல் சுந்தர் வீட்டில் எடுக்கப்பட்டகைரேகைகளும், சரவணனின் கைரேகைகளும் ஒத்துப் போயின.
உடனடியாக தனிப்படை போலீசார் துரைப்பாகத்திற்கு விரைந்தனர். கண்ணகி தெரு சுனாமி குடியிருப்பில் உள்ள வீட்டில்சரவணன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் சரவணனை கைது செய்தனர்.
வைரம் மற்றும் தங்க நகைகளை துணிப்பையில் கட்டி பழைய சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தகர பெட்டியின்பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நகை பையை போலீசார் மீட்டனர்.
கைதான சரவணன் மீது 30 வழக்குகள் உள்ளன. மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். மயிலாப்பூர், அபிராமபுரம், தேனாம்பேட்டை பகுதியில் நடந்த குற்ற சம்பவங்களுக்கும் சரவணனுக்கும்தொடர்பு உள்ளதா என தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த வாரத்தில் தேனாம்பேட்டை பகுதியில் 10 சவரன் நகைகளை திருடிய சரவணன் அடகு கடையில் வைத்து செலவு செய்துவந்துள்ளார்.
கையில் அதிக பணம் இருந்ததால் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை விற்கவோ, அடகு கடையில் வைக்கவோ அவர்முயற்சி எடுக்கவில்லை. போலீசாரும் துரித வேகத்தில் செயல்பட்டதால் நகைகள் கைப்பற்றப்பட்டன.
புத்தாண்டு துவங்கிய நள்ளிரவு ஒரு மணிக்கு விசாரணையை துவக்கிய போலீசார், புத்தாண்டான நேற்று காலை 10 மணிக்குகுற்றவாளியை கைது செய்தனர். மீட்கப்பட்ட நகைகளை கமிஷனர் நடராஜ் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
சபாஷ் போலீஸ்...












Click it and Unblock the Notifications