குமரி வள்ளுவருக்கு வயது 6: தமிழறிஞர்கள் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 6ஆண்டுகள் ஆவதையடுத்து பல்வேறு தமிழறிஞர்கள் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.கடந்த 2000மாவது ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிரமாண்ட திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. அப்போதைய முதல்வர்கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார். சிலை வைக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆவதையொட்டி கன்னியாகுமரி வரலாற்றுபண்பாட்டு ஆய்வு மையம் மற்றும் தமிழ் அறிஞர்கள் சார்பில் வள்ளுவர் சிலையின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு ஆய்வு மையத் தலைவர் வேலப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காந்திஜி காமராஜ்அறக்கட்டளைத் தலைவருமான குமரி அனந்தன், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வ.அய்.சுப்ரமணியம்,எழுத்தாளர்கள் தோப்பில் முகம்மது மீரான், பொன்னீலன் உள்ளிட்ட ஏராளமான தமிழறிஞர்கள் கலந்து கொண்டு வள்ளுவர்சிலையின் பாதத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications