மாணவனுக்கு அடி, உதை: ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்த மாணவனை அடித்து, உதைத்து, வயிற்றில் மிதித்த ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9வதுவகுப்புப் படித்து வரும் மாணவன், 14 வயது சுபாஷ் என்கிற சுடலை.
சுடலை, திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்றபோது சீருடை அணியால் சென்று விட்டான். இதனால் கோபமடைந்த ஆசிரியர்ஜெயினுலாப்தீன், ஏன் சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்தாய் என்று கேட்டு அடித்துள்ளார். பின்னர் தனியறைக்கு அழைத்துச்சென்று சரமாரியாக அடித்து, உதைத்துள்ளார். இதில் மாணவனுக்கு வயிற்றில் கடுமையான காயம் ஏற்பட்டது.
இதனால் வலியில் துடித்த சுடலை, தனது தாத்தா செல்லப்பா ஆசாரியிடம் சென்று கூறியுள்ளான். இதையடுத்து செங்கோட்டைகாவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், ஆசிரியர் ஜெயினுலாப்தீன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications