5ம் தேதி முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஸ்டிரைக்
டெல்லி:
தனியார் மயமாக்கலை கண்டித்தும், பிஎஸ்என்எல்லை நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக அறிவிக்க கோரியும் நாடு முழுவதும்உள்ள 3 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வரும் 5ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் பொதுச் செயலர் நம்பூதிரி விடுத்துள்ளஅறிக்கையில்,கடந்த 2000ல் பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கப்பட்ட போது, பிஎஸ்என்எல் நிறுவனம் நவரத்னா நிறுவனமாக கருதப்பட்டுஅதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது.
ஆனால், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்துவருகிறது. அதே நேரத்தில் அரசு சார்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
தொலைத் தொடர்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அரசு உயர்த்தி உள்ளது.இதனால், தொலைத் தொடர்பு துறையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் 35 முதல் 40சதவீதத்துக்கு மேல் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது கிடையாது.
அரசின் முடிவுகளை எதிர்த்து வரும் 5ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அனைத்துபிஎஸ்என்எல் சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications