போலி எப்ஐஆர்: நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி எப்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க அரசுத தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால்,இதுதொடர்பான பொது நல வழக்கின் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

காவல் நிலையங்களில் புகார்களைப் பதிவு செய்வதற்கான எப்.ஐ.ஆர். புத்தகங்களை போலியாக அச்சடித்து பெருமளவில்முறைகேடுகள் நடந்தது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்து தமிழகத்தையே உலுக்கியது.

காவல்துறையினரே தவறு செய்துள்ள இந்த வழக்கை தமிழக போலீஸார் விசாரித்தால் உண்மை வெளியில் வராது எனவே,சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்சோமையாஜியிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்டார்.

அதற்கு வழக்கு தொடர்பான விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருவதாகவும், இதுதொடர்பாக விரிவான விளக்கம்அளிக்க கால அவகாசம் தேவை என்றும் சோமையாஜி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஏ.பி.ஷா உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+