திருமா வின் ஜாமீனை ரத்து செய்ய கோரி தமிழக அரசு மனு
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில்தமிழக அரசு மனு செய்துள்ளது.
மயிலாடுதுறையில் 2003ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டது. அதில் ஒரு இன்ஸ்பெக்டர்,2 எஸ்ஐகள் உள்பட 12 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். இதையொட்டி திருமாவளவன் உள்பட 42 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவி செய்யப்பட்டது.பிடிவாரண்ட் பிடிக்கப்பட்டதால் உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் முன் ஜாமீன் பெற்றார். மயிலாடுதுறை காவல் நிலையத்தில்தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
ஒரு நாள் மட்டும் ஆஜரான திருமாவளவன் நிபந்தனையை மாற்றி நீதிமன்றத்தில் கையெழுத்திட அனுமதி தர கோரிஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜக்காரியா உசேன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்தவழக்கை நிதிபதி வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதற்கிடையே உயர்நீதிமன்றத்தில் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், மயிலாடுதுறைபோலீஸ் நிலையத்தில் ஆஜராக திருமாவளவனுக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனையை அவர் ஒரு முறை தான்நிறைவேற்றியுள்ளார்.
அவர் மீது 9 வழக்குகள் உள்ளன. 4 வழக்குகள் புலன் விசாரணையிலும், 3 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளன.எனவே திருமாவளவனின் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளைநீதிமன்றத்திற்கு வருகிறது.












Click it and Unblock the Notifications