பிரதமர் மன்மோகன் சிங் இன்று அந்தமான் பயணம்
டெல்லி:
சுனாமி நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று அந்தமான் மற்றும்நிகோபார் தீவுப்பகுதிகளில் பிரதமர் மன்மோகன் சிங் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், இன்று காலை ஹைதராபாத்தில் இந்தியவிஞ்ஞானிகள் மாநாட்டைத் துவங்கி வைத்து சிறந்த விஞ்ஞானிகளுக்கு பரிசளிக்கிறார். இதைத் தொடர்ந்து மாலையில்அந்தமான் புறப்படுகிறார்.அந்தமான் துனை நிலை ஆளுனர் கவர்னர் மற்றும் உயர் அதிகாரிகள், ராணுவ, கடற்படை, விமானப் படை அதிகாரிகளுடன்பிரதமர் சுனாமி மறுசீரமைப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் சுனாமியால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கார் நிகோபர் மற்றும் கேம்பல் வளைகுடா பகுதிகளில்மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிவாரணப் பணிகளை பார்வையிடுகிறார்.
இதையடுத்து கார் நிகோபரில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பிரதமர், சுனாமிக்கு பலியானவீரர்களுக்கு அங்குள்ள இந்திய விமானப்படை தளத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு ஜனவரி 5 தேதி டெல்லி திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications