எஸ்.ஏ. ராஜா ஜாமீன் மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் ஜாமீன் கோரி எஸ்.ஏ.ராஜா தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசுக்குநோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கடந்த 2004ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது சொந்த ஊரானஆலடிப்பட்டியில் நடந்த இந்த படுகொலை தொடர்பாக கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் எஸ்.ஏ.ராஜா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கூலிப் படையினருக்கு ரூ. 5 லட்சம் அளித்து இந்த கொலையை செய்ததாக ராஜா மீது குற்றம் சாட்டப்பட்டது.

ராஜா தாக்கல் செய்த பல்வேறு ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 12ம் தேதி உச்ச நீதிமன்றத்தில்மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.ஜி.பால கிருஷ்ணன் மற்றும் பி.பி.நவ்லேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.ஏ.ராஜா சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி மற்றும் வழக்கறிஞர்கிரீஷ் குமார் ஆகியோர் ஆஜராகினர்.

அவர்கள் 68 வயதான ராஜா இருதய நோயால் அவதிப்படுகிறார். தற்போது பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் அவருக்குசிறைச்சாலை மருத்துவ மனையில் போதிய சிகிச்சை வசதிகள் இல்லை. அவர் இருதய நிபுணரிடம் சிகிச்சை பெற விரும்புகிறார்.

கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அவர் ஜாமீன் நிபந்தனைகளை மீறி எங்கும் தப்பி விடமாட்டார். ஜாமீன் வழங்க எந்தநிபந்தனைகள் விதித்தாலும் ஏற்றுக் கொள்ள அவர் தயாராக உள்ளார். எஸ்.ஏ.ராஜா உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்குஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினர்.

இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+