கிணற்றில் குதித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.ஓசூர் கால்நடைப்பண்ணை அருகே உள்ள எடநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் உமேஷ். இவரது மனைவி நீலம்மா.இவர்களுக்கு ரமேஷ் என்ற மகனும், நிர்மலா என்ற மகளும் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந் நிலையில் உமேஷ் குடும்பத்தினர் நான்குபேரும் அவர்களது வீட்டுத் தோட்டத்தின் பின்புறம் உள்ள கிணற்ளில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.
குடும்பத் தகராறில் நான்கு பேரும் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இருப்பினும், உமேஷின் கைகள் மட்டும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததால், இதில் வேறு யாருக்காவது சம்பந்தம் இருக்கலாம்என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications