தெலுங்கு இன மக்களுக்காக புது கட்சி பாதிமக
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காக மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஏற்கனவே இனவாரியாகவும், சாதி வாரியாகவும் அரசியல் கட்சிகள் அதிகமாக உள்ளன. சமீபத்தில் நடிகர்விஜயகாந்த் தேமுதிக என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளார். தனது கட்சிக்கு தனது தெலுங்கு சமூக மக்கள் ஆதரவளிப்பார்கள்என நம்புகிறார்.
இந் நிலையில் மதுரையில் இன்று கூடிய தமிழக தெலுங்கர் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பாரதிய திராவிடமக்கள் கட்சி (பாதிமக) என்ற புதிய கட்சி துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தெலுங்கு மக்கள் அதிகம் இருக்கும் 125 தொகுதிகளில்போட்டியிடப் போவதாகவும் இக்கட்சியின் தலைவர் முத்துவேல் ராஜன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications