பெங்களூர் தாக்குதல்: ஆந்திராவில் லஷ்கர் தீவிரவாதி கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூர் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதி ஒருவன் ஆந்திராவில்பிடிபட்டுள்ளான்.

சமீபத்தில் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் விஞ்ஞானி ஒருவர்கொல்லப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக, தீவிரவாதியைப் பிடிக்க தென் மாநிலங்கள் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவந்தனர்.

தீவிரவாதியை நேரில் பார்த்தவர்கள் தந்த அடையாளத்தை வைத்து அவனது படமும் வரையப்பட்டு வெளியிடப்பட்டது.

இந் நிலையில் ஆந்திர மாநிலம் நலகொண்டா தாலுகாவில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதி ஒருவன் பதுங்கியிருப்பது குறித்துதகவல் அறிந்த பெங்களூர் போலீஸ் கமாண்டோ படை அந்த இடத்தை முற்றுகையிட்டு அப்துல் ரகுமான் (வயது 35)என்பவனைக் கைது செய்தது.

இவன் காஷ்மீரின் லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது உறுதியாகியுள்ளது. தென் மாநிலங்களில் லஷ்கர்அமைப்பின் தலைவனாக இவன் செயல்பட்டு வந்துள்ளான். அப்துலிடம் இருந்து ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை.

தேவைப்பட்டால் இவனிடம் நார்கோ அனாலிஸிஸ் (உண்மை கண்டறியும் வேதியியல்) சோதனை நடத்தப்படும் என பெங்களூர்போலீஸ் கமிஷ்னர் அஜய்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

அப்துல் ரகுமானிடம் கிடைக்கும் விவரங்களை வைத்து முக்கியமான குற்றவாளிகள் பிடிபடுவர் என சிங் கூறினார்.

இந்தியப் பிரஜையான அப்துல் ரகுமான் கடந்த சில ஆண்டுகளாக செளதி அரேபியாவில் வசித்து வந்துள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+