சென்னை- கெளஹாத்தி: மில்லினியம் பார்சல் ரயில்
சென்னை:
ரயில்களில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க மில்லினியம் பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் என்ற சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில்இருந்து அஸ்ஸாம் தலைநகர் கெளஹாத்திக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்களில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. சரக்குபெட்டிகளில் 75 சதவீதம் சரக்குகள் முன்பதிவு செய்தால் தான் விரும்பிய பெட்டிகளில், விரும்பிய தேதிகளில் விரைவாகசரக்குகளை அனுப்ப முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.இதனால் சரக்கு முன்பதிவிற்காக பெரிய நிறுவனங்கள் நெடு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது இந்நிலை மாறி எந்த அளவு எடை கொண்ட பார்சல்களையும் எந்தத் தேதியில் வேண்டுமானாலும் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில்களில்முன்பதிவு செய்து அனுப்பி வைக்கும் வசதியை ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இதனையொட்டி மில்லினியம் பார்சல் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரலிலிருந்து கெளஹாத்திக்குசரக்கு ரயில் இயக்கப்பட்டது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மின்சார பொருட்கள், வாகன டயர்கள் மற்றும் சிறிய பார்சல்கள் என15 பெட்டிகள் நிறைய 350 டன் சரக்குகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.10.15 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications