கோவை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை:
கோவை ரயில் நலையம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என வந்த தகவலால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் தீவிரக் கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந் நிலையில், கோவை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.டிசம்பர் 31ம் தேதி கோவை ரயில் நிலையத்துக்கு வந்த இந்த மிரட்டலைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 4 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில்வே போலீஸார், ரயில்வேபாதுகாப்புப் படையினர், ராணுவ போலீஸ் மற்றும் அதிரடிப்படையினர் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவையிலிருந்து கிளம்பும் ரயில்கள், கோவை வழியாக வந்து செல்லும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.இதேபோல, கேரளாவிலிருந்து வந்து, செல்லும் ரயில்களிலும் தீவிர சோதனைகள் நடக்கின்றன.
இதேபோல சென்னையில் எழும்பூர் மற்றும் சென்டிட்ரல் ரயில் நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3ஷிப்ட்களாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஷிப்ட்டிலும் 400 பேர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11 ஆகிய பிளாட்பாரங்களின் இரும்புக் கதவுகள்மூடப்பட்டுள்ளன.
இதேபோல போர்ட்டர்களுக்கும் பல அறிவுரைகளை போலீஸார் விதித்துள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அனுமதி பெற்ற602 போர்ட்டர்களுக்கும், வெடிகுண்டு போன்றவற்றை கண்டுபிடிக்கும் பயிற்சியை அளிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வகையிலான பொருட்கள், சூட்கேஸ்களை யாராவது கொண்டு வந்தால் உடனே போலீஸாருக்குத் தகவல்தெரிவிக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications