செரீனா வழக்கு: போலீஸுக்கு நீதிபதி கண்டனம்
மதுரை:
இளம் பெண் செரீனா என்ற ஜனனி மீதான கஞ்சா வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்துவதில் போலீஸ் தரப்புஅலட்சியம் காட்டினால் வழக்கு விசாரணையை நிறுத்தி விடுவேன் என்று போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதிஎச்சரிக்கை விடுத்தார்.
நடராஜ விவிஐபிக்கு மிக நெருக்கமாக இருந்த காரணத்தால் கஞ்சா வழக்கில் சிக்கினார் செரீனா என்ற ஜனனி.கடந்த 2003ம் ஆண்டு கஞ்சா கடத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. செரீனா, அவரது தாயார் ஷெலீஜா, கார் டிரைவர்சதீஷ் ஆகியோர் மீது இதுதொடர்பாக மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது. இன்று இவ்வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் செரீனாவின் காரின் மதிப்பு, அது யாருடைய பெயரில் வாங்கப்பட்டதுஎன்பது குறித்து தனியார் கார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி சாட்சியம் அளித்தார்.
சாட்சியம் அளிக்க வேண்டிய இன்னொருவர் வரவில்லை.
அதுகுறித்து நீதிபதி மாணிக்கம் கேட்டபோது, அவரை அழைத்து வர இயலாமல் போய் விட்டதாக காவல்துறை தரப்பில்தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் நீதிபதி கோபமடைந்தார்.
மாதத்திற்கு ஒரு சாட்சி என்று நான் விசாரித்தால் இந்த வழக்கை எப்போது முடிப்பது? இப்படி ஒவ்வொரு சாட்சியாக கூட்டிவந்தால் 3 வருடத்திற்கு விசாரித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
அரசுத் தரப்பு இத்தனை அலட்சியமாக இருந்தால் விசாரணையை நிறுத்தி விட்டு நான் போய் விடுவேன் என்று கடுமையாககூறினார். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications