பொங்கலுக்கு பின் கூடும் தமிழக சட்டசபை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபை பொங்கல் பண்டிகைக்குப் பின் கூட்டப்படும் என்று தெரிகிறது.

வரும் மே மாதத்துடன் அதிமுக அரசு பதவி ஏற்று 5 ஆண்டுகள் முடிகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையின் இந்தஆண்டுக்கான முதலாவது கூட்டம் பொங்கலுக்கு பிறகு கூடுகிறது. இந்த கூட்டத் தொடர் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின்உரையுடன் தொடங்கும்.

அரசியல் பரபரப்பு நிறைந்த இந்த சமயத்தில் சட்டமன்ற கூட்டம் கூடுவதால் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் விவாதிப்பார்கள். கவர்னர் உரையில் ஜெயலலிதாவின் 5 ஆண்டுகால ஆட்சி சாதனைகளும், நலத்திட்ட உதவிகள் பற்றியும் இடம் பெற்று இருக்கும்.

கவர்னர் உரைக்கு பிறகு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் ஜெயலலிதா பேசுகிறார். அதன் பிறகு இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யப்படும்.

தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த சட்டசபை கூட்டம் தொடங்குவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+