கோட்டக்கரை மேம்பாலம்: மத்திய அரசு அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கோட்டக்கரை ஆற்றுப்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.10.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.திருச்சியையும் ராமநாதபுரத்தையும் இணைக்கும் தேசியநெடுஞ்சாலையில் கோட்டக்கரை ஆற்றின் குறுக்கே உயர்நிலை பாலம்அமைக்க மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் திருச்சி-ராமநாதபுரம் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டகரை ஆற்றின் குறுக்கேகீழ்நிலை பாலம் ஒன்று உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கோட்டகரை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால்,கோட்டகரை கீழ்நிலை பாலத்தின் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த பாலத்தில் சென்ற பஸ் ஒன்று நீரில் மூழ்கி சமீபத்தில் விபத்துக்குள்ளானது. ஏராளமானோர் இதில் உயிரிழந்தனர். தற்போதுஇந்த பாலத்தை மேல்நிலை பாலமாக மாற்றி அமைக்க மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்காகரூ.10.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications