கிரிக்கெட்: கொஞ்சமாவது திருப்பி தர முடியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மழையால் ரத்தான கிரிக்கெட் போட்டிக்காக வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தில் சிறிதளவையாவது திருப்பித்தர முடியுமா என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது.

சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டிநடப்பதாக இருந்தது. ஆனால் மழை மற்றும் புயல் காரணமாக போட்டி முழுமையாக ரத்து ஆனது.

ஆனால் போட்டிக்காக வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை ரசிகர்களிடம் கிரிக்கெட் சங்கம் தரவில்லை. இதையடுத்துசென்னை உயர்நீதிமன்றத்தில், மயிலாப்பூரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல்செய்ய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்துகிரிக்கெட் சங்கம் தாக்கல் செய்த பதில் மனுவில், நுழைவுக் கட்டணத்தை திருப்பித் தர இயலாது. இதை டிக்கெட்டின் பின்புறம்தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீண்டும் புதன்கிழமை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் முன்னிலையில், விசாரணைக்குவந்தது. அப்போது தலைமை நீதிபதி ஷா கூறுகையில், ஒரு நிமிடம் கூட போட்டி நடத்தப்படவில்லை.

முழுமையாக கட்டணத்தைத் திருப்பித் தராவிட்டாலும் கூட ஓரளவாவது திருப்பித் தர முடியுமா? இது தொடர்பாக ஏதாவதுதிட்டம் வகுக்க முடியுமா என்பது குறித்து தெரிவிக்குமாறு கூறினார்.

இதுதொடர்பாக கிரிக்கெட் சங்கத்திடம் கலந்து ஆலோசித்துத் தெரிவிப்பதாக சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன்தெரிவித்தார். இதையடுத்து வருகிற 17ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+