இலங்கை விவகாரத்தில் தலையிடோம்: பிரணாப்
சென்னை:
அடுத்த நாட்டின் (இலங்கை) விவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற மத்திய அரசின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனபாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இன்று சென்னை வந்த முகர்ஜி திமுக கூட்டணியின் மல்டிமீடியா தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார். பின்னர் திமுக தலைவர்கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.அப்போது தமிழக அரசியல் நிலைமை குறித்தும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவுவது தொடர்பான விவகாரம் குறித்தும்இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இச் சந்திப்பின்போது கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவும் உடனிருந்தார்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், கருணாநிதியும் நானும் கடந்த 1970ம் ஆண்டு முதலே நெருங்கியநண்பர்கள். அந்த வகையில் நண்பரைப் பார்க்க வந்தேன் என்றார்.
இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவக் கூடாது என மதிமுக, பாமக ஆகியவை கூறியுள்ளனவே என்று கேட்டபோது,
இன்னொரு நாட்டின் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற மத்திய அரசின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றார் முகர்ஜி.












Click it and Unblock the Notifications