இராக்கில் தற்கொலை தாக்குதல்- 40 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கர்பலா:
இராக்கில் உள்ள ஷியாக்களின் புனித நகரமான கர்பலாவில் இன்று நடந்த பயங்கரமான தற்கொலைத் தாக்குதலில் 40 பேர்பலியாயினர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.
கர்பலாவில் உள்ள மிகப் புனிதமான வழிபாட்டுத் தலத்தின் அருகே இச் சம்பவம் நடந்தது. குண்டுகளுடன் கூட்டத்துக்குள்நுழைந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி, அந்த குண்டை வெடிக்க வைத்து சிதறினான். அதில் 40 பேர் பலியாயினர்.
மேலும் 50 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் பல இரானியர்ளும் அடக்கம்.
நேற்றும் இந்த இடத்தில் கார் பாம் தாக்குதல் நடந்தது. அதில் 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications