ஜெ. புகாருக்கு அமைச்சர் ராசா மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு நானோ அல்லது மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமோதடையாக இருக்கவில்லை என்று அத்துறை அமைச்சர் அ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாமல், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அ.ராசா தடையாகஇருப்பதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழக நலனுக்குவிரோதமாக செயல்படுவதற்கான சான்றே இது என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு ராசா மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மனுவில், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்1986ன் கீழ் ஒரு திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் போது கையாளப்பட வேண்டிய விதிமுறைகளின் படி, தமிழக அரசுஅனுப்பிய இத்திட்டத்திற்கான சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்த அறிக்கை முழுமையானதாக இல்லை.

இத்திட்டம் நிறை வேற்றப்படும் போது, வெளியேற்றப்படும் திடக் கழிவுகளின் அளவு, அவற்றின் வேதித்தன்மை மற்றும்அவற்றின் வெளியேற்றம் குறித்த மேலாண்மைத் திட்டம் குறித்த விவரங்கள், வெளியேற்றப்படும்.

உவர் மற்றும் கழிவு நீரால் கடல் வாழ் உயிரினங்களின் மீது ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்த விவரங்கள் ஆகியவற்றைதமிழக அரசின் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இவற்றை அனுமானித்து தீர்மானிக்க கொச்சியில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையை கோருமாறு தமிழகஅரசுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் தாக்கீது அனுப்பியிருப்பது, கூடுதல் விவரங்களை அளிக்க அறிவுறுத்தித்தானே தவிர,திட்டத்தை முற்றிலும் முடக்குவதற்கு அல்ல.

மத்திய அரசு கோரியுள்ள விவரங்களை தமிழக அரசு விரைவாக அனுப்பும் பட்சத்தில் உடனடியாக இத் திட்டத்திற்கு அனுமதிஅளிக்கப்படும் என்று கூறியுள்ளார் ராசா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+