பார்வர்டு கட்சியில் பதவி: உசிலம்பட்டியில் கார்த்திக் போட்டி
மதுரை:
![]() |
பார்வர்டு பிளாக் கட்சியில் பதவி கிடைத்ததை தொடர்ந்து வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உசிலம்பட்டி தொகுயில் நடிகர்கார்த்திக் போட்டியிடுகிறார்.
பார்வர்டு பிளாக் கட்சியில் சமீபத்தில் சேர்ந்த கார்த்திக் தனக்கு தமிழ் மாநில பொது செயலாளர் பதவி தர வேண்டும். இல்லாதபட்சத்தில் புதுக் கட்சி தொடங்குவேன் என்று மதுரையில் அறிவித்தார். இதை தொடர்ந்து பார்வர்டு பிளாக் கட்சியில் அவருக்குதமிழ் மாநில தலைவர் பதவி வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
கார்த்திக் புதிய கட்சி தொடங்குவதை பார்வர்டு பிளாக் மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. கார்த்திக் மாநில தலைவர் பதவியைஏற்கும் பட்சத்தில் அவரை தேர்தலில் நிறுத்தவும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில்பார்வர்டு பிளாக் கட்சி நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி, சோழவந்தான், முதுகுளத்தூர் உள்பட 5 தொகுதிகளை அதிமுக அணியில் பேட்டு பெறவும் நிர்வாகிகள் விருப்பம்தெரிவித்துள்ளனர். அதிமுக அணியில் இந்த தொகுதிகள் ஒதுக்கினால் கார்த்திக் உசிலம்பட்டி அல்லது முதுகுளத்தூர் தொகுயில்போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இருந்தாலும் உசிலம்பட்டி தொகுதியில் கார்த்திக் போட்டியிடுவது உறுதி என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் நடிகர் கார்த்திக் ஆதரவாளரான தினகரன் பார்வர்டு பிளாக் மாநில இளைஞர் அணி பொறுப்பில் இருந்துநீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை மாநில பொதுச் செயலாளர் சந்தானம் எம்எல்ஏவின் மகனும், மாநில இளைஞர் அணி பொதுசெயலாளருமான இளங்கோவன் அறிவித்துள்ளார். பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் சந்தானம் எம்எல்ஏ மீது கொலைமிரட்டல் புகார் தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications