புலிகளை நெருக்க நார்வேக்கு இலங்கை நெருக்கடி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு விடுதலைப் புலிகளுக்கு நார்வே நெருக்குதல் தர வேண்டும் என இலங்கை அரசு கூறியுள்ளது.அரசின் செய்தித் தொடர்பாளர் நிர்மல் டி சில்வா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வரும் 23ம் தேதி நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம் இலங்கை வருகிறார். அப்போது ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில்வைத்து இலங்கை அரசுடன் பேசுமாறு விடுதலைப் புலிகளை அவர் நெருக்குவார் என்று நம்புகிறோம்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் தான் பேச்சு நடத்துவோம் என்ற கோரிக்கையில் இருந்து புலிகளை இறங்கி வரச் செய்யவேண்டும். அதற்கேற்ப நெருக்குதல் தருமாறு சோல்ஹைமிடம் நாங்கள் வலியுறுத்துவோம்.
இதன்மூலம் தடைபட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முடியும் என நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications