6 பெண் நக்சல்களின் ஜாமீன் நிபந்தனை தளர்வு
சென்னை:
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடந்த நக்சலைட் வேட்டையில் கைது செய்யப்பட்டு பின்னர் பொடா நீதிமன்றத்தால்விடுவிக்கப்பட்ட 6 பெண்களுக்கு, பொடா கோர்ட் விதித்த ஜாமீன் நபந்தனைகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை வனப் பகுதியில் போலீஸார் நடத்திய நக்சலைட் வேட்டையின் போது 6 பெண்கள் உள்பட20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.கைது செய்யப்பட்டவர்களில் சத்திய மேரி, ரீட்டா மேரி, லீனா மேரி, ஆனந்தி உள்ளிட்ட 6 பெண்களையும் பூந்தமல்லி பொடாநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. தினசரி பொடா நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அவர்களுக்குநிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து 6 பெண்களும் பூந்தமல்லி மற்றும் சென்னையில் வாடகைக்கு வீடு தேடினர். ஆனால் இவர்கள் நக்சலைட்டுகள்என்ற பீதியில், யாரும் வாடகைக்கு வீடு தர முன் வரவில்லை.
இதையடுத்து 6 பேரின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்களுக்குத் தங்க வீடுகிடைக்காத காரணத்தால் பொடா நீதிமன்ற நிபந்தனையை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தநிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், பாட்ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இன்று நிபந்தனையை தளர்த்திஉத்தரவிட்டது. அதன்படி, 6 பேரும் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். 15 நாட்களுக்கு ஒருமுறைபொடா நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டால் போதும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications