பஷீரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெங்களூர்த் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக சென்னையில் பிடிபட்டுள்ள முகம்மது பஷீரிடம் உண்மை கண்டறியும்சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர்த் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆந்திராவில் கைது செய்யப்பட்ட அப்துல் ரஹ்மான் கொடுத்த தகவலின் பேரில்,சென்னைக்கு வந்திருந்த பெங்களூரைச் சேர்ந்த முகம்மது பஷீர் என்பவரை பெங்களூர் போலீஸார் பிடித்துள்ளனர்.

அவரிடம் புதன்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தீவிரவாதஅமைப்புகளின் திட்டம் குறித்து எந்த தகவலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து பஷீரை பெங்களூருக்குக் கொண்டு செல்ல அவர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபிறகே பஷீரை பெங்களூருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என சென்னை போலீஸார் கூறியதால் பஷீரை பெங்களூருக்குஅழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து பஷீரிடம் இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த விசாரணையின் இறுதியில், பஷீரிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த பெங்களூர் போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

இன்றைய விசாரணையில் தமிழக உளவுப்பிரிவு ஐ.ஜி. சஞ்சீவ் குமாரும் கலந்து கொண்டார். பஷீரை பெங்களூருக்கு அழைத்துச்செல்வது தொடர்பாக கர்நாடக போலீஸ் குழு தமிழக உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னாவுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.இன்று மாலை வாக்கில் பஷீர் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்படக் கூடும் எனத் தெரிகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+