பாலாற்றில் ஆந்திரா அணை!: ராமதாஸ் எதிர்ப்பு
சென்னை:
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றுக்குக் குறுக்கே அணை கட்ட ஆந்திர மாநில அரசு முடிவெடுத்துள்ளதற்கு பாட்டாளிமக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் உற்பத்தியாகும் பாலாறு தமிழகத்தின் வட மாவட்டங்களில் வேலூரில் தொடங்கி காஞ்சிபுரத்தில் முடிகிறது.கர்நாடகத்தில் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடும் பாலாறு, பின்னர் ஆந்திராவுக்குள் நுழைந்து சுமார் 45 கிலோமீட்டர்தொலைவைத் தாண்டி, வேலூரில் நுழைகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு முடிந்து கடலில் கலக்கிறது.ஆந்திராவில் ஒடும் பாலாற்றின் குறுக்கே, குப்பம் பகுதியில் அணை கட்ட அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு பாமககடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,
ஆந்திர மாநிலத்தில், குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுதமிழகத்தின் வட மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால்,தமிழகத்தின் வட பகுதி முழுவதும் பாலைவனமாகி விடும்.
வேலூர் மாவட்டம் முதல் காஞ்சிபுரம் மாவட்டம் வரை வட மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்கு பாலாறுதான் உயிர் நாடியாகஉள்ளது. சென்னை மாநகரின் புறநகர்ப் பகுதிகளுக்கும் பாலாற்று நீர்தான் முக்கிய ஆதாராமாக உள்ளது.
ஏற்கனவே, கர்நாடக அரசு பாலாற்றின் குறுக்கே ஏராளமான அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வரும் நீரின் அளவைவெகுவாகக் குறைத்து விட்டது. இப்போது ஆந்திராவும் அணை கட்டினால் வட தமிழகத்தின் நிலை மிக மோசமாகி விடும்.
ஆந்திர அரசின் முயற்சிகளைத் தடுக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. கடந்த மழை,வெள்ளத்தின்போது பாலாற்றில் பெருக்கெடுத்த நீரை தேக்கி வைக்க தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்காமல் கடலில்கலக்க விட்டதால், அதையே சாக்காக எடுத்துக் கொண்டு ஆந்திர அரசு இப்போது அணையைக் கட்ட தீவிரமாகியுள்ளது.
ஆந்திர அரசின் நடவடிக்கையை எதிர்த்து பாமக தீவிரப் போராட்டத்தை நடத்தும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications