அப்துல் ரஹ்மான் உண்மையில் தீவிரவாதியா?
சென்னை:
பெங்களூரில் ஐஐஎஸ்சியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆந்திராவைச் சேர்ந்த அப்துல்ரஹ்மானுக்கு தீவிரவாதத் தொடர்புகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
பெங்களூர் இந்திய அறிவியல் கழக வளாகத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆந்திர மாநிலம் நல்கொண்டாவைச்சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரை பெங்களூர் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் பாகிஸ்தான் ஆதரவுலஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தென்னிந்திய கமாண்டர் என்றும் அவர்தான் இந்தத் தாக்குதலை தலைமை தாங்கி நடத்தினார்என்றும் பெங்களூர் போலீஸார் கூறியுள்ளனர்.ஆனால் அப்துல் ரஹ்மான் தீவிரவாதி அல்ல என்று ஆந்திர போலீஸார் கூறியுள்ளனர்.
பெங்களூர்த் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அப்துல் ரஹ்மானின் செல்போனுக்கு சர்வதேச அழைப்புகள் சிலவந்துள்ளதாக பெங்களூர் போலீசார்கூறுகிறார்கள். ஆனால் அப்துல் ரஹ்மான் செளதி அரேபியாவில் வேலை பார்த்தவர்என்பதால் அவரது நண்பர்கள் பேசியிருக்கலாம் என்று ரஹ்மான் தரப்பில் கூறுகிறார்கள்.
ரஹ்மானின் மனைவி சல்மா பேகம் கூறுகையில், நானும், எனது கணவரும் அக்டோபர் 14ம் தேதிதான் செளதியில் இருந்துஆந்திராவுக்குத் திரும்பினோம். விடுமுறையில் நாங்கள் வந்துள்ளோம். அங்கு அவர் ஒரு நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாகவேலை பார்த்து வருகிறார். மற்ற எல்லோரையும் போல அவரும் ஒரு சாதாரண மனிதர்தான்.
அவரிடம் எந்தவிதமான கெட்ட பழக்கமும்இல்லை. தீவிரவாதத் தொடர்புகளோ அல்லது வித்தியாசமான தொடர்புகளோஅவரிடம் கிடையாது.
டிசம்பர் 29ம் தேதி பெங்களூர் போலீஸார் எங்களிடம் விசாரித்தனர். பின்னர் அனைவரையும் விட்டு விட்டனர். 31ம் தேதி முதல்ரஹ்மானைக் காணவில்லை. இந் நிலையில் நாங்கள் அவரைக் கைது செய்துள்ளோம் என்று பெங்களூர் சதாசிவ நிகர்போலீஸாரிடமிருந்து எங்களுக்குத் தந்தி வந்தது. எனது கணவர் அப்பாவி என்று கதறி அழுதபடி கூறுகிறார் சல்மா பேகம்.
இதே கருத்துதான் ஆந்திர போலீஸாருக்கும், மத்திய புலனாய்வு அமைப்பான ஐ.பிக்கும் உள்ளது. பெங்களூர் போலீஸாரின்வேகமான நடவடிக்கை குறித்து ஐ.பி. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,
செளதியில் உள்ள தனது நண்பர்களிடம் பேசியுள்ளார் ரஹ்மான். அப்போது பெங்களூர் சம்பவம் குறித்தும் கூறியுள்ளார். இதுஎதேச்சையான உரையாடலாகத்தான் இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் பெங்களூர் போலீஸார் ரஹ்மானைக் கைதுசெய்து அவர்தான் லஷ்கர் அமைப்பின் தென்னிந்திய கமாண்டர் என்று முடிவு கட்டி விட்டார்கள். இது எங்களுக்கு ஆச்சரியமாகஉள்ளது என்று கூறியுள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கூறுகையில், 13 வருடமாக செளதியில் வசித்து வருகிறார் ரஹ்மான். அப்படிஇருக்கையில் திடீரென எப்படி அவர் லஷ்கர் அமைப்பின் தென்னிந்திய கமாண்டராக உருவாக முடியும்? இதில் லாஜிக்கேஇல்லையே என்கிறார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ஒருவேளை ரஹ்மான் தென்னிந்திய கமாண்டராக இருந்திருந்தால், நிச்சயம் அது ஐ.பி.க்குதெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருந்தால் அவர்கள் முன் கூட்டியே ஆந்திர அரசை உஷார்படுத்தியிருக்கலாமே என்றும் அவர்கேட்கிறார்.
ரஹ்மான் ஒரு தீவிரவாதியாக இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அவருக்கு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த யாருடனாவதுதொடர்பு இருந்திருக்கலாம். அவர்கள் தீவிரவாதிகள் என்று தெரியாமல் கூட அவர்களுடன் பழகியிருக்கலாம் என்று ஆந்திரமாநில போலீஸார் மத்தியில் கருத்து நிலவுகிறது.
மேலும், அப்துல் ரஹ்மானிடம் பெங்களூர் போலீஸார் நடத்திய விசாரணையில் பெங்களூரைச் சேர்ந்த சிலரது முகவரிகள்,தொலைபேசி எண்களைக் கொடுத்துள்ளார். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போதும் தீவிரவாத தொடர்புடைய எந்தத்தகவலும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை.
ரஹ்மானுடன் தொடர்புடைய பெங்களூரைச் சேர்ந்த முகம்மது பஷீர் என்பவரை சென்னையில் போலீஸார் பிடித்துவிசாரித்தபோது, அவர் திருக்குரான் புத்தகம் விற்பனை செய்பவர் என்று தெரிய வந்துள்ளது. இதனால் பெங்களூர் போலீஸார்பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications