திண்டுக்கல்-பாலக்காடு இடையே புதிய ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திண்டுக்கல், பாலக்காட்டுக்கு இடையே புதிய ரயில் விடுவது குறித்து வருகிற பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று மத்தியரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்துள்ளார்.சென்னை, பெருங்குடி-வேளச்சேரி இடையே நடந்து வரும் மாடி ரயில் போக்குவரத்துப் பணிகளை வேலு பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெருங்குடி-வேளச்சேரி இடையிலான ரயில் போக்குவரத்து அடுத்தஆண்டு ஜனவரி முதல் தொடங்கும்.
அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. திண்டுக்கல்லில் இருந்து பாலக்காடுக்கு புதிய ரயில் விடுவது குறித்தஆய்வு முடிந்துள்ளது. புது ரயில் குறித்த அறிவிப்பை வருகிற பட்ஜெட்டிலேயே வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மைசூர்-தஞ்சாவூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 9ம் தேதி முதல் கும்பகோணம் வரை நீட்டிக்கப்படுகிறது என்றார்வேலு.












Click it and Unblock the Notifications