வாசன் முன்னிலையில் நாறிய காங்கிரஸ்
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் பயிற்சிக்கு வந்த மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் காங்கிரஸார்கோஷ்டி மோதலில் ஈடுபட்டு பெரும் ரகளையில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்தில், தமிழக விவசாய காங்கிரஸ் தொண்டர்கள் பயிற்சிமுகாம் நடைபெறுகிறது. இதைத் தொடங்கி வைக்க ஜி.கே.வாசன் பிற்பகல் 1 மணி வாக்கில் அங்கு வந்தார்.கட்சி நிர்வாகிகள் வாசனை வரவேற்று அழைத்து வந்தனர். அப்போது கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்நெடுஞ்செழியனின் ஆதரவாளர்கள் பெருமளவில் அங்கு திரண்டு வந்தனர். தங்களது தலைவரின் பெயரை அழைப்பிதழில்போடவில்லை.
இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. அழகிரி தான் காரணம் என்று கூறி வாசனின் காரை மறித்து, முற்றுகையிட்டு போராட்டம்நடத்தினர். அவர்களுக்குப் போட்டியாக அழகிரியின் ஆதரவாளர்களும் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதமாக ஆரம்பித்த இந்த பிரச்சினை பின்னர் கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.மண்டபத்தில் கூடியிருந்தவர்களும் போராட்டத்தில் குதித்து நாற்காலிகள், இருக்கைகளை தூக்கிப் போட்டு ரகளையில்ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியது. இத்தனை அமர்க்களத்தையும் வாசன் காருக்குள் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். இந்த மோதலில் அழகிரியும் தாக்கப்பட்டார். சரமாரியாக அவருக்கு உதை விழுந்தது.
இரு தரப்பினரையும் அமைதிப்படுத்த வாசன் கடுமையாக முயன்றும் ஒன்றும் முடியவில்லை. இந்த மோதலால் பயந்து போனபெண்கள் அங்கிருந்து ஓடினர். பெரும் போர்க்களமாக மாறியது அந்த இடம்.
நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் ஒரு வழியாக சண்டை முடிந்தது. மூட் அவுட் ஆகிப் போன வாசன், ஒரு வழியாகமண்டபத்திற்குள் நுழைந்து கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் அவர் திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவர் போன பிறகு மீண்டும் இரு தரப்பினரும் மோதலில் இறங்கினர். இதையடுத்து போலீஸுக்கு தகவல் போய் அவர்கள்விரைந்து வந்தனர். இரு தரப்பினரையும் விலக்கி விட்ட அவர்கள் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக கூறி இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications