பஷீர் தீவிரவாதி என்கிறது பெங்களூர் போலீஸ்: மறுக்கிறது தமிழக போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உண்மை கண்டறியும் சோதனைக்காக பெங்களூர் கொண்டு செல்லப்பட்ட முகம்மது பஷீர்தான், பெங்களூர்த் தீவிரவாதத்தாக்குதலை மேற்கொண்டவர் என பெங்களூர் போலீஸார் உறுதியாக நம்புகின்றனர்.

பெங்களூர்த் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக சென்னைக்கு வந்த போலீஸார், குரான் புத்தகங்கள் வாங்குவதற்காக சென்னைக்குவந்திருந்த பெங்களூரைச் சேர்ந்த பஷீர் என்பவரைப் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது தீவிரவாதத்தாக்குதல் தொடர்பான எந்தத் தகவலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பஷீரை கர்நாடக போலீஸார் பெங்களூர் கொண்டு சென்றுள்ளனர்.

அவரிடம் நார்கோ அனாலிஸிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப் போவதாக பெங்களூர் போலீஸார்தெரிவித்துள்ளனர்,

இதுகுறித்து சென்னை உளவுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

பஷீர் மீது பெங்களூர் போலீஸாருக்கு மூன்று சந்தேகங்கள் உள்ளன. ஆந்திராவில் பிடிபட்ட அப்துல் ரஹ்மானுடன் பஷீருக்குமறைமுக தொடர்பு இருந்திருக்கலாம்; தலைமறைவாக உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம்; தலைமறைவாகஇருப்பதற்காக சென்னைக்கு அவர் வந்திருக்கலாம் என்ற 3 சந்தேங்களின் அடிப்படையில் பஷீரிடம் விசாரணை நடத்தினர்.

பெங்களூர் போலீஸார் கூறிய புகார்கள், குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரிடம் நாங்கள் தீவிர விசாரணைநடத்தினோம். ஆனால் அவர்கள் சொன்ன புகாருக்கு எந்தவித ஆதாரம் அவரிடமிருந்தோ அல்லது சென்னையிலோகிடைக்கவில்லை. இதனால் பஷீர் மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து பஷீர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதால் நாங்கள் அங்கு அழைத்துச் சென்று விசாரிக்கப் போவதாக பெங்களூர்போலீஸார் கூறினர். இதனால் அவரை பெங்களூர் போலீஸாரிடம் நாங்கள் ஒப்படைத்துள்ளோம்.

பஷீர் ஒரு தீவிரவாதி என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதே உண்மை என்றார்.

இருப்பினும் பெங்களூர் போலீஸார் வேறு விதமாக கூறுகின்றனர். பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் தாக்குதலைநடத்தியதே பஷீர்தான். அவர்தான் விஞ்ஞானி எம்.சி. பூரியை சுட்டுக் கொன்றுள்ளார். பஷீரிடம் நடத்திய விசாரணை மற்றும்எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

மேலும், பெங்களூர்த் தாக்குதல் தொடர்பாக பலரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் வரையப்பட்ட கம்ப்யூட்டர் முகத்துடன்,பஷீரின் முகம் முழுமையாக ஒத்துப் போகிறது. எனவே அவர்தான் கொலையாளியாக இருக்க முடியும் என சந்தேகிக்கிறோம் எனபெங்களூர் போலீஸ் தரப்பு கூறுகிறது

பஷீரை இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் உண்மை கண்டறியும் சோதனைக்கு அவரை உட்படுத்தபோலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே பஷீர் போலீஸாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:

எனக்கு சொந்த ஊர் மைசூர் அருகே உள்ள எம்.ஓசூர். மனைவி பாத்திமா ரானா, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அரபிமொழியில் நான் தேர்ச்சி பெற்றவன், ஆலிம் பட்டம் பெற்றுள்ளேன். 6வது வகுப்பு வரை படித்துள்ளேன்.

எனது குடும்பம் மைசூரில் வசிக்கிறது. நான் பெங்களூரில் உள்ள ஒரு பள்ளி வாசலில் மத குருவாக உள்ளேன். அமைதி இல்லம்என்ற அமைப்பில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். சித்த வைத்தியம் தெரியும்.

அரபு மொழி போதனைகளான யாசினை கன்னடத்தில் மொழி மாற்றம் செய்து புத்தகங்களாக வெளியிட்டு விற்பனை செய்துவந்தேன்.

அரபி மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றவன் என்பதால் பல இடங்களுக்கும் போதனை செய்ய செல்வேன். வெளி மாநிலங்கள்பலவற்றுக்கும் போயுள்ளேன். குஜராத், நேபாளம், மும்பை ஆகிய இடங்களுக்குப் போயுள்ளேன்.

சென்னைக்கு கடந்த 2004ம் ஆண்டு முதல் முறையாக வந்தேன். யாசின் அச்சிடுவது தொடர்பாக டிசம்பர் 22ம் தேதி சென்னைக்குவந்தேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள படேல் கிராபிக்ஸ் என்ற அச்சகத்தில் புத்தகம் அச்சிடக் கொடுத்தேன். அதை திரும்ப வாங்கிச்செல்வதற்காகவே இங்கு வந்தேன்.

மத போதகர், யாசின் புத்தக வியாபாரி என்ற முறையில் அப்துல் ரஹ்மான் என்னை வந்து சந்தித்திருக்கலாம். ஆனால் அவரைஎனக்கு தெரியாது. மத போதகர் என்ற முறையில் எனது செல்போன் எண் அவரிடம் இருந்திருக்கலாம்.

மற்றபடி அவருக்கும், எனக்கும், பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார் பஷீர்.

மொத்தத்தில் பஷீர் அப்பாவியா, தீவிரவாதியா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+