தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம்: கருணாநிதி
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டதிமுக கவுன்சிலர் தனசேகரனை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரால் விடுதலை ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எம்.ஜி.ஆர். நகர் மழை, வெள்ள நிவாரணக் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்த சம்பவத்திற்குத் திமுகவினர் பரப்பியவதந்தியே காரணம் என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். இந் நிலையில் வதந்தி பரப்பிய காரணத்திற்காக திமுககவுன்சிலர் தனசேகரனை போலீஸார் கைது செய்தனர்.
தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனசேகரன் மனு செய்தார். அதை ஏற்றநீதிமன்றம், தனசேகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் அவர் ஜாமீனில் வெளியாகும் நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் ஜாமீனை எதிர்த்து அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக மேல் முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அமர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி சர்தார் சக்காரியா உசேன் அளித்த தீர்ப்பில், தனசேகரன் மீது சாட்சிகள் அளித்த வாக்குமூலமும், அரசு கூறும் குற்றச்சாட்டும்பொருந்தி வரவில்லை. மேலும் ஜாமீனில் வெளிவரக் கூடிய குற்றப் பிரிவுகளின் கீழ் தான் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவர் நாகர்கோவிலில் தங்கியிருக்கும்படி அமர்வு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. எனவே அவர் சாட்சிகளை கலைக்கக்கூடிய வாய்ப்பும் இல்லை. எனவே அரசின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் தனசேகரனுக்கு ஜாமீன் கிடைத்து விட்டாலும் கூட அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்பட்டிருப்பதால் அதிலிருந்து அவரால் இப்போதைக்கு விடுதலை ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனசேகரனை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மத்திய சிறைக்குச் சென்று சந்தித்தார்.
கருணாநிதி அறிக்கை:
இது தொடர்பாக இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கவுன்சிலருக்கு செசன்ஸ் கோர்ட்டும், அத்ை தொடர்ந்துஉயர் நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியுள்ளதன் மூலம் அதிமுக அரசு அவர் மீது சர்வாதிகாரமான முறையில் வழக்குப் போட்டதுஉறுதியாகிவிட்டது.
எதிர்க் கட்சிகளை வழக்குக் காட்டி மிரட்ட முயல்கிறார்கள். தனசேகரன் மீதான குண்டர் சட்ட வழக்கு எந்த அளவுக்குநியாயமானது என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடந்து வருகிறது என்றுகூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications