மெக்கா: கட்டட விபத்தில் இந்தியர் உள்பட 34 பேர் பலி
மெக்கா:
மெக்காவில் எட்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் புனிதப் பயணம் மேற்கொண்ட 34 யாத்ரீகர்கள் பலியாயினர். அதில்ஒருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர் ஆவார்.
உலக நாடுகள் அனைத்திலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் யாத்திரைக்காக மெக்காவில் குவிந்துள்ளனர். அவர்கள்பல்வேறு கட்டடங்கள், கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் லூலூ அல்-கயர் என் எட்டு மாடி விடுதிக் கட்டடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் 34 பேர் பலியாயினர்.இச் சம்பவம் நடந்தபோது இதில் தங்கியிருந்த பெரும்பாலான யாத்ரீகர்கள் வெளியே சென்றிருந்தனர்.
இதனால் பெரும் எண்ணிக்கையிலான உயிர்ப் பலிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்து,துனீசியா, யுஏஇ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் ஒரு இந்தியரும் அடக்கம். காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மத் ரஜப் ராதர் என்பவரும் இந்த கட்டடவிபத்தில் பலியானார்.
இதற்கிடையே இந்த இடிபாடுகளில் சிக்கி 80 பேர் வரை பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள்தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications