ஒசூர் அருகே யானைகள் அட்டகாசம்: விவசாயி மிதிபட்டு சாவு
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காட்டு யானை மிதித்து விவசாயி ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.
ஓசூர் அருகே உள்ள தளி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ளகிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி நாசம் விளைவித்து வருகின்றன. யானைகளைக் கட்டுப்படுத்தவனத்துறையிடம் பலமுறை கிராமவாசிகள் புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந் நிலையில் தாசரஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு விவசாயிகள், தங்களது நிலங்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தியது.
இதில் நாராயண ரெட்டி என்பவர் யானை மிதித்ததில் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் ஒருவர் படுகாயம்அடைந்தார். மற்ற இருவரும் லேசான காயமடைந்தனர்.
யானை மிதித்து விவசாயி இறந்ததால் ஆத்திரமடைந்த தாசரஹள்ளி கிராமத்தினர் நாராயண ரெட்டியின் உடலை எடுத்துக்கொண்டு வனத்துறை சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் தலையிட்டு அவர்களைசமாதானப்படுத்தினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications