வருமுன் காப்போம்: சங்கர மட ஆக்கிரமிப்பை இடித்த ஊழியர்கள்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தின் முன் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை இடிக்கஅரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி கிளம்பியதைத் தொடர்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை சங்கர மட ஊழியர்களே இடித்துத் தள்ளிவருகின்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் இரு சங்கராச்சாரியார்களும் சிக்கியது முதலே காஞ்சி சங்கர மடமும் அடிக்கடி ஏதாவது ஒருவிஷயத்துக்கா செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.இந் நிலையில், சங்கர மடத்தின் முன் பகுதியில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதை இடிக்க அதிகாரிகள் வரப்போவதாக நேற்று மாலை திடீரென செய்தி பரவியது. அதை உறுதிப்படுத்துவது போல சில போலீஸாரும் அந்தப் பகுதிக்குவந்தனர்.
இதைத் தொடர்ந்து, அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நுழைவாயில் மேல் கூரை உள்ளிட்ட சிலவற்றை இடித்துத்தள்ள சங்கர மட ஊழியர்களுக்கு ஜெயேந்திரர் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அந்த ஊழியர்களே சில கூலித் தொழிலாளர்களை பிடித்து வந்து கடப்பாரைகளுடன் களமிறங்கினர்.
அவர்களே அந்த ஆக்கிரமிப்புக்களை இடித்து அப்புறப்படுத்தினர். இருப்பினும், அதிகாரிகள் எந்த நேரமும் வரலாம் என்றபீதியும் நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications