கோவை மில்லில் பெண்கள் சித்ரவதை
கோயம்பத்தூர்:
கோயம்பத்தூரில் ஒரு மில்லில் 4 பெண்களை அடிமையாக வைத்திருந்து கொடுமைப்படுத்திய மில் உரிமையாளர் மீதுநடவடிக்கை எடுக்க கோரி ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் வரும் 10ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகஅறிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 4 பெண்கள் கோயம்பத்தூர் புறநகர் பகுதியான பட்டணம் என்ற இடத்தில் உள்ள ஒருமில்லில் வேலைக்கு சேர்ந்தனர். அந்த மில் உரிமையாளர் கடந்த 2 மாதமாக 4 பெண்களையும் அடிமைகளாக நடத்திசித்திரவதை செய்து வந்துள்ளார்.இதை தொடர்ந்து அந்த 4 பெண்களும் மில்லில் இருந்து தப்பித்து குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளிடம் தஞ்சமடைந்தனர்.இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மதிமுக வியாபாரிகள் சங்கபொதுச்செயலாளர் துரைசாமி கூறியதாவது:
மில்லில் அடிமைகளாய் இருந்து பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய தகவல்கள் பத்திரிகை, மற்றும் டிவிகளில் வெளியானபிறகும், அந்த மில் உரிமையாளர் மீது கோவை மாவட்ட நிர்வாகமோ, போலீசாரோ, எந்த நடவடிக்கையும் எடுக்காததுகண்டனத்துக்குரியது.
இது போன்று தமிழகத்தில் உள்ள பல மில்களில் அப்பாவி சிறுவர்களும், பெண்களும் அடிமைகளாய் வேலை செய்துவருகின்றனர். அந்த மில் உரிமையாளர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கோவையில் 4 பெண்களுக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தை கண்டித்தும், அந்த மில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் வரும் 10ம் தேதி ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications