9 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 70 ஹஜ் பயணிகள் சாவு

Subscribe to Oneindia Tamil

மெக்கா:

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியரின் புண்ணிய தலமான மெக்காவில் பயணிகள் தங்கியிருந்த விடுதிக் கட்டடம் இடிந்துவிழுந்ததில் 70 பேர் பலியாயினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மெக்காவில் இந்த முறை ஹஜ் பயணிகள் 25 லட்சம் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில்,குறிப்பிட்ட நேரத்தில் வந்து குவிவதால் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.

கடந்த 2003ல் இங்கு கூட்ட நெரிசல் காரணமாக 251 பேர் பலியாயினர். இதை விட அதிகமாக, 1990ல் 1,426 பேர் இறந்தனர்.மேலும் பலர் காயமடைந்தனர். இந்த முறை விபத்து எதுவும் நடக்கக் கூடாது என்று சவுதி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கைநடவடிக்கை மேற்கொண்டது.

விபத்துகள் நடக்காமல் சமாளிக்க 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும்,நேற்று விடுதி ஒன்று இடிந்து விழுந்து 70 பக்தர்களை பலி வாங்கியது.

மெக்கா மசூதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஒன்பது அடுக்குமாடி விடுதிக் கட்டடத்தில் பல்வேறு நாட்டுபயணிகள் தங்கியிருந்தனர். முதலில் கட்டட உச்சியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கிபலியாகியுள்ளனர்.

இடிபாடுகளில் பலர் பிணமாகக் கிடந்தனர். நான் எண்ணியதில் 23 பேர் இறந்துகிடந்தனர் என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹஜ்ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறினார். 80க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

2 வது கட்ட தகவலின்படி 70 பேர் இறந்து விட்டதாக அங்குள்ள வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் உயிர்ப்பலிஅதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் இந்திய பெண் ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார். மற்ற இந்தியர்கள்பத்திரமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+