தஞ்சையில் தீவிரவாதிகள் பதுங்கல்?: கர்நாடக தனிப்படை வேட்டை- மதுரையிலும் தேடுதல்
தஞ்சாவூர்:
பெங்களூர்த் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சில தீவிரவாதிகள் தஞ்சாவூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவலின்அடிப்படையில் கர்நாடக போலீஸ் தனிப்படை அங்கு முகாமிட்டு தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
பெங்களூரில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கர்நாடக போலீஸார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர். இதில் ஆந்திராவில் அப்துல் ரஹ்மான் என்பவரும், சென்னையில் பஷீர் என்பவரும் போலீஸ் பிடியில்சிக்கினர்.ரஹ்மான் கொடுத்த தகவலின் பேரில் பஷீரைப் பிடித்த போலீஸார் தற்போது அவரை பெங்களூருக்குக் கொண்டு சென்றுவிசாரித்து வருகிறார்கள். இந் நிலையில் ரஹ்மான் மூலம் கிடைத்த மற்றொரு தகவலின் அடிப்படையில் தஞ்சையில் சிலதீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கர்நாடக தனிப்படை போலீஸார் தஞ்சை விரைந்தனர். அங்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்செந்தாமரைக் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தஞ்சையில் உள்ள பல்வேறு லாட்ஜுகள்,சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் தீவிர வேட்டை நடந்து வருகிறது.
ரயில் நிலையத்திலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சை நகர எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. மாறு வேடத்திலும் போலீஸார் தேடுதல் வேட்டையில் தீவிரமாகஇறங்கியுள்ளனர். தஞ்சை போலீஸாரும் இந்த வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளிடம் பயங்கர வெடிபொருட்கள் இருப்பதாகக் கருதப்படுவதால் வெடிகுண்டு நிபுணர்களையும்உடன் அழைத்துக் கொண்டு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல மேலும் இரு கர்நாடக போலீஸ் குழுக்கள் மதுரை மற்றும் புனேவுக்கும் விரைந்துள்ளன.
பெங்களூர்த் தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகள் நான்கு பிரிவுகளாக பிரிந்து சென்னை, தஞ்சை, மதுரை, புனேவுக்குச் சென்றுவிட்டதாக ரஹ்மான் தெரிவித்துள்ளதாக கர்நாடக போலீஸார் கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications