பாலாற்றின் குறுக்கே அணை: ஆந்திராவுக்கு ஜெ கடும் எதிர்ப்பு
சென்னை:
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர மாநில அரசின் முயற்சிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில்,குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணையைக் கட்டி தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள்நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்துக்கு விரோதமானது. இதனால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர்.
வட மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் நிலை உருவாகும். இந்த நீரைத் தான் தமிழகத்தின் வட மாவட்ட மக்கள்முழுக்க முழுக்க நம்பியுள்ளனர். இந் நிலையில் தமிழகத்துக்கு வரும் நீரை அணை கட்டி தடுக்கும் செயலால் மக்கள்கொந்தளிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
1892ம் ஆண்டில் கையெழுத்தான நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் மீறி
அணை கட்ட முயலும் ஆந்திர மாநிலத்தின் செயல் துரதிஷ்டவசமானது. அந்த ஒப்பந்தத்தின்படி தமிழக அரசின்அனுமதியில்லாமல் பாலாற்றின் குறுக்கே அணையோ, தேக்கமோ கட்டக் கூடாது.
இந்த விஷயத்தில் தமிழகத்தை ஆந்திரா அணுகவே இல்லை. எனவே உடனடியாக இந்த அணைத் திட்டத்தை நிறுத்துமாறுகேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஆந்திராவின் அணைத் திட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று கடும் கண்டனம் தெரிவித்ததும்,ஆந்திர அரசின் முயற்சிகளைத் தடுக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் ஜெயலலிதாவின் ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகத்தில் உற்பத்தியாகும் பாலாறு தமிழகத்தின் வட மாவட்டங்களில் வேலூரில் தொடங்கி காஞ்சிபுரத்தில் முடிகிறது.கர்நாடகத்தில் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடும் பாலாறு, பின்னர் ஆந்திராவுக்குள் நுழைந்து சுமார் 45 கிலோமீட்டர்தொலைவைத் தாண்டி, வேலூரில் நுழைகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு முடிந்து கடலில் கலக்கிறது.
கர்நாடக அரசு பாலாற்றின் குறுக்கே ஏராளமான அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வரும் நீரின் அளவை வெகுவாகக் குறைத்துவிட்ட நிலையில் குப்பம் பகுதியில் அணையைக் கட்டி தமிழகத்துக்குச் செல்லும் நீரைத் தடுக்க ஆந்திரா முயல்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications