ரூ. 600 கோடி மோசடி: வங்கி அதிகாரி கைது
மதுரை:
போலி ஆவணங்களை காட்டி ரூ. 600 கோடிக்கு வங்கி உத்தரவாதம் கேட்ட, மும்பையை சேர்ந்த போலி நிறுவனஇயக்குனர்களுக்கு சிபாரிசு செய்ததாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மேலாளரை மதுரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மதுரை குற்றப் பிரிவு போலீசார் கூறியதாவது:மும்பையை சேர்ந்த விக்சன் டேடா டெக்னாலஜி என்ற நிறுவனத்தை சேர்ந்த இயக்குனர்களாகிய பிரதீப் கே.உகடா, முகமது ரபிக்,முகமது பிக்ஷா வாலா மற்றும் தனுஜா ஆகியோர் மதுரை ஐசிஐசிஐ வங்கி மேலாளர் சதாசிவத்தை அணுகி, சில பத்திரங்களைகாட்டி, தங்களுக்கு மும்பை மட்டுமின்றி சிவகாசியிலும் சொந்த நிறுவனம் உள்ளதாகவும்,
மேலும் தாங்கள் மதுரையில் வீடுகள் கட்டும் திட்டத்திற்காக, கனடா நாட்டில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்திடம் நிதியுதவிபெறவிருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர். எனவே தங்களுக்கு இந்த பத்திரங்களின் அடிப்படையில் வங்கி உத்தரவாதம் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை ஏற்று வங்கி மேலாளர் சதாசிவமும் அவர்களுக்கு உத்தரவாதம் கொடுக்க சிபாரிசுசெய்துள்ளார்.
இது குறித்து கனடா நிறுவனத்தை வங்கியின் மூத்த அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது வீடு கட்டும் திட்டத்திற்காக எங்களிடம்எந்த நிறுவனமும் நிதியுதவி கேட்கவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் விசாரணை நடத்தியதில் மும்பையில் விக்சன் டேடா என்ற பெயரில் எந்த நிறுவனமும் இல்லை என்றும், அவர்கள் அளித்தபத்திரங்கள் எல்லாம் போலியானது என்றும் தெரியவந்தது.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் துவக்கினர். அப்போதுவங்கியின் முன்னாள் மேலாளர் சதாசிவம் தனது அதிகாரத்தை மீறி போலி ஆவணங்களுக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க சிபாரிசுசெய்திருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கும், மும்பை ஆட்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார்அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாகிவிட்ட மும்பையை சேர்ந்த போலி நிறுவன இயக்குனர்களை போலீசார்தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications