தமிழக காங் பார்வையாளராக மொய்லி நியமனம்
டெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் சோனியா காந்தி அதிரடி மாற்றங்கள் செய்துள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகஉள்ள ஜெயந்தி நடராஜனுக்கு, காங்கிரஸ் வெளியுறவுப் பிரிவின் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினரும் கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லியிடம், தமிழககாங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு, இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி கட்சியின்நிர்வாகத்திலும், காரிய கமிட்டியிலும் கட்சி தலைவர் சோனியா காந்தி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.
காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு 20 உறுப்பினர்களை சோனியா காந்தி நியமித்துள்ளார். பாண்டிச்சேரியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிநாராயணசாமியும் காரிய கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நட்வர் சிங்கிற்கு கட்சியின் எந்தகமிட்டியிலும் இடம் அளிக்கப்படவில்லை.
மாற்றி அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, அர்ஜூன் சிங், அசோக் கெலாட், திக்விஜய் சிங், ஜி.வெங்கடசாமி, ஜனார்த்தன்திரிவேதி, மொஷினா கித்வாய், முகுல் வாஸ்னிக், பி.கே.ஹரிபிரசாத், மார்கரெட் ஆல்வா, மோதிலால் வோரா, பிரணாப் முகர்ஜி,சைபுதீன் சோஸ், சிவராஜ் பட்டீல், வி.நாராயணசாமி, ஊர்மிளா சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் பொருளார் பதவியில் மோதிலால் வோராவே நீடிப்பார். இது போல் சோனியா காந்தியின் அரசியல்செயலாளராக அகமது படேல் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினரும் கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லியிடம், தமிழககாங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயந்தி நடராஜனுக்கு சோனியா காந்தி இரண்டு பொறுப்புகளைஅளித்துள்ளார்.
கட்சியின் செய்தி தொடர்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஜெயந்தியிடம், காங்கிரஸ் கட்சியின் வெறியுறவு பிரிவுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜெயக்குமார், தாழ்த்தப்பட்டோர் அமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications